
நிர்வாகக் காரணங்கள் மற்றும் இட நெருக்கடி காரணமாக, தமிழக முதல்வரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்படுகிறது.
தற்போது 10-வது தளத்தில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு உடனடியாக மாற்றப்படுகின்றன.
இந்த இடமாற்றத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 1, 3, 5, 7 மற்றும் 8-வது தளங்களில் உள்ள கூட்ட அரங்குகளை பொதுத்துறைக்கு ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.