
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 85.83 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான 24 வயது யஷ்வீர் சிங், 85.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா பதிரகே 89.75 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.