
டீ சீரிஸ் தயாரிப்பில் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 'போலீஸ் கம்பெனி' என்ற புதிய திரைப்படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1997 முதல் 2004 வரை மும்பையில் 300-க்கும் மேற்பட்ட கேங்ஸ்டர்களைச் சுட்டுக் கொன்ற சிறப்புப் படை அதிகாரி தயா நாயக்கின் கதையை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது.
இப்படத்தில் தயா நாயக் கதாபாத்திரத்தில் நடிகர் ஹர்ஸ் வர்தன் ரானே நடிக்க உள்ளதாக ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.