
ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அப்ஹா, கமிஸ் முஷைத், ஜிசான் மற்றும் நஜ்ரான் ஆகிய நான்கு மாகாணங்களில் உள்ள பொருளாதார மையங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 73 பேர் காயமடைந்துள்ளதாகவும், சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய எரிசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் ஆலைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.
ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது சவுதி நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்ததற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி அமைப்பு அறிவித்துள்ளது.