
மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடும் 25 வயதான எர்லிங் ஹாலண்ட், கோவென்ட்ரி எப்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்து தனது 300-வது கிளப் கோலை எட்டியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி தொடர்ந்து 3-வது வெற்றியைப் பதிவு செய்து, பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஹாலண்ட் இதுவரை மான்செஸ்டர் சிட்டிக்காக 165 கோல்களும், டார்ட்மண்ட் அணிக்காக 86 கோல்களும், சால்ஸ்பர்க் அணிக்காக 29 கோல்களும், மோல்டே அணிக்காக 20 கோல்களும் அடித்துள்ளார்.