
திரையரங்க உரிமையாளர்களின் நிபந்தனைகளை எதிர்த்து, செப்டம்பர் 1 முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் நிறுத்துவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திரையரங்குகளில் வெளியாகும் படங்களை 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அரசு தலையிட்டு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.