
அமெரிக்கா புதிதாக விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் ஈரான் எதையும் இழக்கப்போவதில்லை என்றும், தடைகளைத் தாண்டி உறுதியாக நிற்போம் என்றும் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
1979-ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு ஈரான் மீது பல ஆண்டுகளாகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில், பொருளாதார அழுத்தங்களை ஈரான் நிராகரித்துள்ளது.