
சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்க சட்டம் இயற்றக் கோரி நடிகர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த பொது நல வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பார்த்திபனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.