
ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலம் வென்ற வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கும் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அவர் பாராட்டு தெரிவித்தார்.