நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றிவரும் இன்கோசர்வ் சொசைட்டி மற்றும் ஹவுசிகோஸ் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சங்கங்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், என்.எல்.சி. நிர்வாகம் வழக்கம்போல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த 8.33 சதவீத போனஸ் மற்றும் கருணை தொகையை வழங்குவதாக அறிவித்து இந்த போனஸை வழங்கியுள்ளது.
எனினும் லாபத்தில் பங்கு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.