சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட தடை கோரி ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டது.
மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெற அனுமதி கோரப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.