
ஜெயிலர் 2 திரைப்படம் வெளியீடு தள்ளிப்போவதாகப் பரவிய வதந்திகளைத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மறுத்துள்ளது.
படம் திட்டமிட்டபடி ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15-ஆம் தேதியே திரையரங்குகளில் வெளியாகும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தில், முதல் பாகத்தைப் போலவே பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.