
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரனின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதற்கு நேற்று நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என சந்திரசேகரன் முன்பு தெரிவித்த நிலையில், இந்த பதவி நீட்டிப்புக்கு நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நிர்வாகக் குழு கூட்டத்தில் 4-1 என்ற வாக்குகளில் பதவி நீட்டிப்பு உறுதியானதாகவும், அந்த ஒரு எதிர்ப்பு வாக்கு நோயல் டாடாவுடையது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.