
கடலூர், சேலம், வேலூர் உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை மூடும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2025-26 ஆம் ஆண்டில் 150 ஆகக் குறைந்த விற்பனையகங்களின் எண்ணிக்கை, தற்போது மேலும் 10 மூடப்படுவதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் புதிய 'வெற்றித் தறி' ஷோரூம்கள் அமைக்கப்படும் என்று கூறிவிட்டு, இருக்கும் விற்பனையகங்களை மூடுவது தவெக அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் முரணானது என அவர் விமர்சித்துள்ளார்.