
தமிழகத்தில் சன்ன ரக அரிசி உற்பத்தி போதுமான அளவில் இல்லாததாலும், வெளிமாநிலங்களிலிருந்து நெல் மூட்டைகள் திருப்பி அனுப்பப்படுவதாலும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது; டீலக்ஸ் பொன்னி ரூ.1,800-க்கும், வெள்ளை பொன்னி ரூ.2,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதால், தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு கிலோ அரிசி ரூ.100-க்கு விற்கப்பட வாய்ப்புள்ளதாக அரிசி ஆலைகள் தரப்பில் கூறப்படுகிறது.