
கிர்கிஸ்தானின் இசிக்-குல் மலைப்பகுதியில் 104 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் 6-வது உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன.
வில் வித்தை, குதிரையேற்ற வில் வித்தை, கயிறு இழுத்தல் மற்றும் குதிரை வீரர்கள் பங்கேற்கும் கோக்-போரு போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் போட்டியில் இடம்பெற்றுள்ளன.
இந்தியா, ஈரான், சீனா, துருக்கி, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.