
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேடைகளில் காட்டு கத்தல் கத்தும் முதல்வர் விஜய் தாராபுரத்தில் மட்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார் என்று விமர்சித்தார்.
தவெகவில் இணைந்து வேறு சின்னத்தில் போட்டியிடுவதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தாராபுரம் மக்களை ஏமாளிகள் என நினைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
சட்டம்-ஒ ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களில் தவெக அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.