
அமெரிக்காவின் யுஜின் நகரில் ஆகஸ்ட் 5 முதல் 9 வரை நடைபெறும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 36 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
இந்த இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
இவின் ஆனந்த், ஜிதின் அர்ஜூனன், நகுல் பிரபு, பவானா, தியா உள்ளிட்டோர் பல்வேறு தடகளப் பிரிவுகளில் இந்தியாவிற்காகப் போட்டியிடுகின்றனர்.