
நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோயை பொது சுகாதாரப் பிரச்சினையாக ஒழித்த முதல் நாடாக பூடானை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
பூடானில் கடைசியாக ஜூன் 2023-ல் ரேபிஸ் உயிரிழப்பு நிகழ்ந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை.
நாய்களுக்கு 70 சதவீத தடுப்பூசி மற்றும் 'ஒன் ஹெல்த்' அணுகுமுறை மூலம் ரேபிஸ் வைரஸ் சுழற்சியை பூடான் அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.