தென்காசி சங்கரநாராயண சாமி கோயிலில் நடைபெறும் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு, ஜூலை 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடித்தபசு தேரோட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் இந்த விடுமுறையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் மாதம் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.