நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் மசூதி மற்றும் கிராமங்களில் புகுந்த ஆயுதக் கும்பல், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான பெனினை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
கடத்தப்பட்டவர்களை மீட்க ராணுவத்திற்கு அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக இந்த சம்பவம் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.