
செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை விரிவுபடுத்தவும் செலவினங்களைக் குறைக்கவுமான மறுசீரமைப்பு நடவடிக்கையாக, ஆரக்கிள் நிறுவனம் தனது ஊழியர்களை மீண்டும் பெருமளக்கில் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தரவு மையங்களின் கட்டமைப்புக்காக ஆரக்கிள் நிறுவனம் தற்போதைய காலாண்டில் மட்டும் 28.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
கடந்த மே 31-ஆம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் ஏற்கெனவே 21,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்த அந்நிறுவனம், தற்போது அமெரிக்காவில் தொடங்கியுள்ள இந்தப் பணிநீக்கத்தை இந்தியாவுக்கும் விரிவுபடுத்த உள்ளது.