
14-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 3 முதல் 11 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய மூன்று நகரங்களில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தெற்காசிய ஒலிம்பிக் கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடைசியாக 2004-ம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கு நடைபெறுகிறது.