
மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளில் அழைப்பவரின் பெயரைக் கட்டாயம் காட்டும் வசதியை நவம்பர் 1 முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் போன்களில் இந்த வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான பெயரைக் காட்ட ஜிஎஸ்டி பதிவில் அந்தப் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை கூறியுள்ளது.