
சர்க்கரை விலை கிலோ 40 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், இதில் 36,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஈ20 பெட்ரோல் உற்பத்திக்காக 32 சதவீத கரும்பு திசை திருப்பப்பட்டதே சர்க்கரை தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
சர்க்கரை இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ள போதிலும், கருப்புச்சந்தை வியாபாரிகள் பயனடைந்துள்ளதால் ரேஷன் கடைகளில் மானிய விலையில் சர்க்கரை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.