
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் வரும் 15-ம் தேதி தொடங்கும் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், இந்தியாவைச் சேர்ந்த நடுவர்கள் யாரும் இடம்பெறவில்லை.
1998-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அதிகாரிகள் இல்லாமல் உலகக் கோப்பை நடைபெறுவது இதுவே முதல்முறை என்று முன்னாள் அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (FIH) நடுவர் குழுவில் தற்போது வெறும் 6 இந்திய ஆடவர் மற்றும் 4 மகளிர் நடுவர்கள் மட்டுமே உள்ளனர்.