
கடந்த 2001ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கையின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் 8 ஓவர்களில் 3 மெய்டன் உள்பட 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்த அசாத்திய பந்துவீச்சால் ஜிம்பாப்வே அணி 15.4 ஓவர்களில் வெறும் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்ததுடன், இலங்கை அணி 4.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் பந்துவீச்சாளர் ஒருவரின் மிகச்சிறந்த பந்துவீச்சு சாதனையாக சுமார் 25 ஆண்டுகள் கடந்தும் இந்த சாதனை முதலிடத்தில் நீடிக்கிறது.