Technology
"'கூகுள்' நிறுவனத்துக்கு ரூ.4,435 கோடி அபராதம்"

"'கூகுள்' நிறுவனத்துக்கு ரூ.4,435 கோடி அபராதம்"

Dinamalar2h
THE BRIEF
1

ஐரோப்பிய யூனியனின் பொதுத் தரவு பாதுகாப்பு விதிமுறைக்கு மாறாக பயனர்களின் அனுமதியின்றி தனிப்பட்ட இருப்பிட தகவல்களை ரகசியமாக சேகரித்ததாக கூகுள் நிறுவனத்திற்கு 4,435 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2

கூகுள் நிறுவனத்தின் ஐரோப்பிய தலைமையகம் அயர்லாந்தில் உள்ளதால் அந்நாட்டின் தரவு பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியதுடன், ஐரோப்பிய யூனியனில் தனியுரிமை விதிகளை மீறியதற்காக அந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட நான்காவது மிகப்பெரிய அபராதம் இதுவாகும்.

3

பயனர்களின் 'வெப் ஆப் ஆக்டிவிட்டி' எனப்படும் டிஜிட்டல் டைரி மற்றும் இருப்பிட வரலாறு மூலம் தகவல்கள் கண்காணிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டதும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள இருப்பிட துல்லியத்தன்மை அம்சத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.