
தமிழக அரசின் தாய்மாமன் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் டெண்டரை ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் செய்கூலி, ஹால்மார்க் மற்றும் காப்பீடு உள்ளிட்டவற்றுக்கு ஒரு காசு மட்டுமே கட்டணமாகக் கோரிய நிலையில், 70:30 என்ற விகிதத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் முதல் நான்கு மாதங்களுக்கு மொத்தம் 1,28,499 தங்க மோதிரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.