
முதல்வர் விஜய் பேசுவது போன்று ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது குறித்து சிபிசிஐடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் செப்டம்பர் 1 அன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோவை உருவாக்கிய போலி ஐடி குறித்த தகவல்களை வழங்கவும், வீடியோவை அகற்றவும் மெட்டா நிறுவனத்திடம் சிபிசிஐடி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.