
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கோரும் விண்ணப்பங்களுக்கு ஆகஸ்ட் 28 முதல் நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்படாது என மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
4 கிலோவாட் வரை மின் இணைப்பு கோருபவர்கள் தேவையான ஆவணங்கள் மற்றும் இடத்தின் GPS இருப்பிடத்தை ஆன்லைனில் சரியாகப் பதிவேற்றினால் போதுமானது.
பதிவேற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் GPS தகவல்களை GIS செயலி மூலம் சரிபார்த்து, மின் இணைப்பு வழங்கப்படும்; குளறுபடிகள் இருந்தால் மட்டுமே கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.