
தமிழக முதல்வர் விஜய், மேட்டூர் அணையின் 8 மதகுகளை இயக்கி டெல்டா பாசனத்திற்காக நேற்று தண்ணீரைத் திறந்து வைத்தார்.
வினாடிக்கு 3,000 கன அடியில் தொடங்கி படிப்படியாக 7,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு, 17.15 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில், செப்டம்பர் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படுவது இது 4-வது முறையாகும் என நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.