
வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் எஃப்சிஆர்ஏ சட்ட திருத்த மசோதாவை விரிவாக ஆய்வு செய்ய மத்திய அரசு பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தக் குழுவில் லோக்சபாவைச் சேர்ந்த 21 எம்பிக்கள் மற்றும் ராஜ்யசபாவைச் சேர்ந்த 10 எம்பிக்கள் என மொத்தம் 31 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்.
மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, வெளிநாட்டு நன்கொடைகளைக் கண்காணிக்க விதிமுறைகள் அவசியம் என்றார்.