
இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸின் போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கேப்டனாக 2000 ரன்கள் என்ற மைல்கல்லை அவர் கடந்தார்.
இதன் மூலம் வெறும் 41 இன்னிங்ஸ்களில் இச்சாதனையை நிகழ்த்தி, இச்சாதனையைச் செய்த இரண்டாவது ஆசிய கேப்டன் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது கேப்டன் என்ற பெருையைப் பெற்றுள்ளார்.