
இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ் ஆகியோருக்குச் சினிமா சங்கங்கள் இணைந்து ஆகஸ்ட் 16-ம் தேதி நடத்தவிருக்கும் 'ராஜ கோபுரங்கள்' விழாவைத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற சேரன் தலைமையிலான புதிய நிர்வாகிகள், விழாவில் தங்களை முறையாக அழைக்கவில்லை என்றும், தங்களின் பங்களிப்பு குறித்துத் தெளிவுபடுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மொத்தம் 21 பதவிகளில் 10 இடங்களைச் சேரன் அணியும், 11 இடங்களை வி.சி.குகநாதன் அணியும் வென்ற நிலையில், இந்த விழா விவகாரத்தில் எழுத்தாளர் சங்கம் அறமற்ற முறையில் புறக்கணிக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.