
இந்தியா, சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரஷ்யாவுடனான எரிசக்தி வர்த்தகத்தை நிறுத்தினால், ரஷ்யா போரைத் தவிர்க்க வேண்டிய சூழல் உருவாகும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகஸ்ட் மாதம் 16.5 சதவீதம் குறைந்து, செப்டம்பரில் நாள் ஒன்றுக்கு 1.9 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்து வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா ரஷ்யா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், உலகின் முக்கிய நாடுகளின் ஆதரவு போரைத் தீவிரமாக்க உதவுகிறது என்று ஜெலன்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.