
இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் நடத்தியது போன்றதொரு மிகப்பெரிய பல்முனைத் தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக ஜெருசலேம் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்காக லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதி, ஹமாஸ் மற்றும் ஈராக், சிரியா ஆதரவு படைகளை ஈரான் ஒருங்கிணைத்து வருவதாகவும், ஏவுகணை உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 7 தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஈரானின் இந்த புதிய கூட்டு முயற்சி மத்திய கிழக்கு போரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.