
வெளிநாடுகளில் ஈரான் நடத்தும் தாக்குதல்கள், சதித்திட்டங்கள் மற்றும் இணையவழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 29 நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரானுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் ரகசிய வலையமைப்புகள் மீது சர்வதேச அளவில் விசாரணையும் நடவடிக்கைகளும் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடந்த தாக்குதல் மற்றும் ஐரோப்பாவில் நடந்த பல தாக்குதல்களுக்கு ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.