
2013-ம் ஆண்டு வெளியான 'மூடர் கூடம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.
நவீன் ஹிதயத் எழுதி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஓவியா, சென்ராயன், ராஜாஜி, குபேரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிராண்டல் பிக்ஸர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா தயாரித்துள்ள இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.