
டெங்கு காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சைகள் எதுவும் இல்லை என்பதால், பாராசிட்டமால் வழங்கி அறிகுறிகளுக்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது.
ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தாலோ அல்லது ரத்தக்கசிவு போன்ற தீவிரப் பிரச்னைகள் ஏற்பட்டாலோ மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும்.
டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை மருத்துவமனையில் அனுமதி தேவையா என்பதை நோயாளிகள் முடிவு செய்ய முடியாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.