
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த பணியில் 19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த 33 கேள்விகள் கேட்கப்படும்.
ஆன்லைனில் சுய கணக்கெடுப்பு செய்தவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட SE ID-ஐ கணக்கெடுப்பாளரிடம் காட்ட வேண்டும் என்றும், 2027 மார்ச் 1-ம் தேதி இறுதி விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.