
கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணிபுரிந்த 1,900 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதில் 1,340 பேர் அரபு நாடுகளில் நிகழ்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 511 பேரும், சவுதி அரேபியாவில் 354 பேரும், குவைத்தில் 162 பேரும், ஓமனில் 146 பேரும், பஹ்ரைனில் 101 பேரும், கத்தாரில் 66 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்த பதிலின்படி, அரபு நாடுகளில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.