
நைஜீரியாவின் டராபா மாகாணத்தில் உள்ள பின்னாரி கிராமத்திற்குள் நுழைந்த பண்டிட்ஸ் ஆயுதக்குழுவினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் கத்தி தாக்குதல் நடத்தினர்.
கிராம மக்களின் வீடுகளுக்கு தீ வைத்ததுடன் உணவு பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இந்த கொடூர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 62 பேர் உயிரிழந்தனர்.
பாதுகாப்படையினர் விரைந்து சென்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற ஆயுதக்குழுவினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.