/nakkheeran/media/media_files/2026/09/13/mtc-bus-file-2026-09-13-23-59-29.jpg)
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறைக்குப் பிறகு சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகப் போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செப்டம்பர் 14 அன்று மாலை மற்றும் இரவில் 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செப்டம்பர் 15 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.