
சட்டப்பேரவையில் இல்லாதவர்கள் குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் பிரபாகரிடம் தி.மு.க. சட்டப்பேரவை கொறடா வேலு தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் நேரில் இந்த மனுவை அளித்தனர்.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும், மின்துறை அமைச்சர் அதைச் சீரமைக்காமல் பேசி வருவதாகவும் தி.மு.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.