டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் இந்தியா ஆகிய நிறுவனங்கள் செப்டம்பர் 1 முதல் கார் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.
டாடா கார்களின் விலை மாடலைப் பொறுத்து ரூ.25,000 வரை அதிகரிக்கப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முன்பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.