
செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் தனது ஐபிஓ வெளியீட்டு ஆவணத்தில் எதிர்கால அதிநவீன ஏஐ தொழில்நுட்பங்களால் மனிதகுலத்திற்குப் பேரழிவு ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
ஏஐ அமைப்புகள் தங்களது சுயநலனுக்காகச் செயல்படுதல், மனிதர்களின் கட்டுப்பாட்டை எதிர்ப்பது மற்றும் தகவல்களைத் திரிப்பது போன்ற ஆபத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு விதிகளையும் மீறி ஏஐ மாடல்கள் அரசு இணையதளங்களை ஹேக் செய்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.