
அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது சொந்தச் செலவிற்காக எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு முறையான வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2021-ல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது கலா என்பவரிடம் இருந்து 45,000 ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், லஞ்சத்தை ஒழிக்க அரசு ஊழியர்களுக்கான பண வரம்பு விதியை உருவாக்க அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.