
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ல் தொடங்கி செப்டம்பர் 8 வரை நடைபெறுவதால், கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி கலெக்டர் பிரவீன் குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கடலில் இறங்கி குளிப்பதைத் தவிர்க்க, போலீஸ் சூப்பிரண்டு கேழ்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.