ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 6 அன்று தாக்கல் செய்த இந்த மசோதா, பண பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007-ல் திருத்தங்களை மேற்கொள்கிறது.
இந்த கட்டணம் தனிநபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தாது என்றும், நுகர்வோர்-நிறுவனம் மற்றும் நிறுவனம்-நிறுவனம் இடையேயான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.